ஓயாத மாணவர்கள் ரகளை…… இதற்கு முடிவே கிடையாதா….?

இயந்திரதனமான வாழ்க்கை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது போன்று நித்தம் நித்தம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னைவாசிகளுக்கு கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம், பொதுஇடங்களில் தங்களின் கெத்தை காட்டுதல், புறநகர் ரயில் ஸ்டேசன்களில் அரிவாளை உரசியபடி செல்லுதல் என்று அவர்களின் நடவடிக்கைகள் வேறு சென்னை மக்களை கடும் சோதனைகளுக்கு…

By: Updated: July 25, 2019, 04:31:51 PM

இயந்திரதனமான வாழ்க்கை, போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவது போன்று நித்தம் நித்தம் பாதிக்கப்பட்டு உள்ள சென்னைவாசிகளுக்கு கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டம், பொதுஇடங்களில் தங்களின் கெத்தை காட்டுதல், புறநகர் ரயில் ஸ்டேசன்களில் அரிவாளை உரசியபடி செல்லுதல் என்று அவர்களின் நடவடிக்கைகள் வேறு சென்னை மக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த வரிசையில், தற்போது புதிதாக சேர்ந்துள்ளது. அரும்பாக்கம் சாலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் இடையே நடந்த மோதல். ரூட்டு தல விவகாரத்தின் காரணமாக நடைபெற்ற மோதலாக இது கருதப்படுகிறது. மாநகர பேருந்தில் மாணவர்களில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அரிவாளை கொண்டு தாக்கும் அளவிற்கு மாறியது. மாணவர்கள் சரமாரியாக மற்ற மாணவர்கள் மீது அரிவாளை கொண்டு தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ரூட்டு தல விவகாரம், தங்களில் யார் கெத்து என்று மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிகழ்வுகளால், பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ சமுதாயம் உணர்வது எப்போது?…. இதற்கு தீர்வு தான் என்ன?….

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Pachiyappas college students violence video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X