என்னை சுட்டுக் கொல்ல போலீஸ் முயற்சி : கதறும் ரவுடி ராக்கெட்ராஜா

நெல்லை மாவட்ட போலீசார் தன்னை சுட்டுக் கொல்ல முயல்வதாக, ராக்கெட் ராஜா வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளியான இவர் இன்று வாட்ஸ் அப் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை போலீசார் சுட்டுக் கொல்ல தீவிர்மாக இருக்கிறார்கள். என் மீது எந்த வழக்கும் இல்லாத நிலையில் என்னை சரணடையுமாறு கேட்டனர்.

அதற்காக ஒருவரை தூது அனுப்பினார்கள். தூது வந்த நபரே, ‘நீங்கள் சரண் அடைந்தாலும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனார். இந்நிலையில், போலீசார் என்னை சுற்றி வளைத்துவிட்டனர். எப்போது வேண்டுமானாலும் என்ன சுட்டுக் கொல்வார்கள். எனது உயிருக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்கு நெல்லை போலீசாரே காரணம்’ என்று சொல்லியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close