பிரியா பிரகாஷ் வாரியரின் ‘மெர்சல்’ ரோஸ் மில்க் டயலாக் டப்ஸ்மாஷ் - வீடியோ

‘மெர்சல்’ படத்தில் விஜய் - சமந்தாவுக்கு இடையே நடைபெறும் பிரபலமான உரையாடலான ரோஸ் மில்க் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

2018ஆம் ஆண்டு காதலர் தின வாரத்துக்கு பர்ஃபெக்ட் ட்ரீட் என்றால், பிரியா பிரகாஷ் வாரியர்தான். அவரைத் தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாளப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது. அந்தப் பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

அந்தப் பாடல் மட்டுமின்றி, பிரியா பிரகாஷ் வாரியர் இதற்கு முன்னதாக நடித்த, பாடிய, டப்ஸ்மாஷ் செய்த எல்லாமே தற்போது வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில், ‘மெர்சல்’ படத்தில் விஜய் – சமந்தாவுக்கு இடையே நடைபெறும் பிரபலமான உரையாடலான ரோஸ் மில்க் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த டப்ஸ்மாஷ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close