பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த முதல் தமிழ்ப் பாடல் - வீடியோ

‘நீ வானம் நான் மழை’ என்ற இந்தப் பாடலை, அமல் ஆண்டனி அகஸ்டின் மற்றும் சந்தியா சரவணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

2018ஆம் ஆண்டு காதலர் தின வாரத்துக்கு பர்ஃபெக்ட் ட்ரீட் என்றால், பிரியா பிரகாஷ் வாரியர்தான். அவரைத் தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாளப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது. அந்தப் பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என இணையமே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் நடித்த தமிழ்ப் பாடல் ஒன்று வைரலாகத் தொடங்கியிருக்கிறது. ‘நீ வானம் நான் மழை’ என்ற இந்தப் பாடலை, அமல் ஆண்டனி அகஸ்டின் மற்றும் சந்தியா சரவணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். சச்சின் ராஜ் இசையமைக்க, மோகன் ராஜன் – ஸ்ரீகுமார் நாயர் இருவரும் இணைந்து பாடலை எழுதியுள்ளனர்.

×Close
×Close