அதிரூபனே... சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது!

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரி தயாரிப்பில் ‘சாமி 2’ படத்தின் ‘அதீரூபனே’ பாடல் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி 2’ படத்தின் பாடல் வீடியோ இன்று வெளியானது. இந்தப் படத்தை ஷிபு தமீம் தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இடையே இருக்கும் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலின் வரிகள் அமைந்துள்ளது. வீடியோவில் தோன்றும் புகைப்படங்கள் வைத்துப் பார்க்கையில், கீர்த்தி சுரேஷ் வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற கதாநாயகன் விக்ரம் சண்டையில் ஈடுபடுகிறார். இதனை வைத்து ஒரு ஆணித்தரமான முடிவுக்கு நம்மால் வர இயலவில்லை என்றாலும், படத்தின் சண்டைக் காட்சியின் போது இந்தப் பாடல் வரலாம் என எதிர்பார்க்கலாம்.

×Close
×Close