'இது நாங்கள் கடந்து வந்த காதல் பாதை!' - ரொமாண்டிக் ஜாகீர் - சகாரிகா

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் – நடிகை சகாரிகா காட்கேவின் காதல் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களுமே கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டமில்லாமல், பெரிய விளம்பரங்கள் இல்லாமல் இவர்களது திருமணம் நடைபெற்றது. பலருக்கும், இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்பதே தெரியாமல் இருந்தது. அந்தளவிற்கு, தங்கள் காதல் விவகாரம் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்.

திருமணம் நடந்து முடிந்த பின்னர் தேனிலவிற்கு மாலத்தீவு சென்ற இந்த ஜோடி, அங்கு நிறைய புகைப்படங்களை எடுத்து சமூக தளங்களை வைரல் ஆக்கியது.

இந்த நிலையில், தங்களது காதல் பயணம் குறித்தும், நடந்து முடிந்த திருமணம் குறித்தும், இந்த இளம் ஜோடி மனம் திறந்து இந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

×Close
×Close