ஆக்‌ஷன் அவதாரம்: சண்முக பாண்டியனின் 'மதுர வீரன்' டீசர்!

சண்முக பாண்டியனின் 'மதுர வீரன்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ எனும் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். இதில் விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

ஆனால், இப்படம் பெரும் தோல்வியடைந்தது. அதன்பின், “தமிழன் என்று சொல்” எனும் படத்தில் சண்முகப்பாண்டியன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் சண்முகப் பாண்டியனுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படமும் டிராப் ஆனது.

இதையடுத்து, பூ, சகுனி, சேட்டை, சண்டி வீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் முத்தையா இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. அப்படத்திற்கு ‘மதுர வீரன்’ எனவும் டைட்டில் வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று ‘மதுர வீரன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி பக்கா ஆக்ஷன் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

×Close
×Close