'என் வயதில் இரண்டை எடுத்துக் கொள் நண்பா'! - கருணாநிதிக்காக உருக்கமுடன் சிவாஜி கணேசன்

நான் எப்போது இறப்பேன் என்று தெரியாது

கருணாநிதியும், சிவாஜி கணேசனும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். 1998ம் ஆண்டு, தமிழ் திரையுலகம் இணைந்து நடத்திய, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பவள விழாவில் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனக்கும் கருணாநிதிக்கும் உள்ள நட்பை குறித்து உருக்கமுடன் குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜி பேசுகையில், ‘நான் எப்போது இறப்பேன் என்று தெரியாது. எனவே, என் வயதில் இருந்து இரண்டை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் நீடூழி வாழ வேண்டும். நான் இறந்தால் என் மனைவி மட்டுமே வருத்தப்படுவாள். ஆனால், அவள் சகோதரனுக்கு என வயதில் இரண்டை கொடுத்துவிட்டேன் என தெரிந்தால், அதிக சந்தோஷம் அடைவதும் அவள் தான்’ என்று சிவாஜி கணேசன் உருக்கமாக பேசினார்.

சிவாஜி தனது பேச்சை முடித்த பிறகு, மேடையில் அமர்ந்திருந்த கருணாநிதியை கட்டிப்பிடித்த போது, கருணாநிதி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close