தாஜ்மஹால் கட்டுனது கொத்தனாரு.... ஷாஜஹான் கிட்ட கேட்டா கூட ஒத்துப்பாரு!

அனிருத் இசையில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தில் வரும் பாடலின் முதல் வரி தான் இந்த தலைப்பு.

என்னடா இது தலைப்பு-னு கன்ஃபியூஸ் ஆகிட்டிங்களா? குழப்பம் வேண்டாம். சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் வரும் பாடலின் முதல் வரி தான் இந்த தலைப்பு.

இப்பாடலின் முதல் சிங்கிள் டீசரை இயக்குனர் மோகன் ராஜா தற்போது தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விவேகா இப்பாடலை எழுதியுள்ளார். வரும் 28-ஆம் தேதி இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியாகவுள்ளது என்றும் மோகன் ராஜா அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசரை இதுவரை 3,566,107 பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close