'இளைஞர்களே தோள் நிமிர்த்தி வாருங்கள்'! - காவிரி உரிமை மீட்பு பயணத்திற்கு வீடியோ மூலம் அழைக்கும் ஸ்டாலின்

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் திரளானோர் கலந்து கொள்ள வலியுறுத்தி, ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மத்திய அரசு மீது தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை வரும் 9ம் தேதி, உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்த திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இந்தப் பயணத்தின் ஒரு குழுவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (7-ம் தேதி) திருச்சி முக்கொம்பில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள், திருச்சியில் இருந்து ஆரம்பித்து கடலூர் வழியாக, சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுனர் மாளிகை வரை சென்று, ஆளுநரிடம் மனுவை அளிக்க உள்ளார்கள். மாலை 4 மணிக்கு ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வலியுறுத்தி, ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்த உரிமை மீட்பு பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

×Close
×Close