’சுசிலீக்ஸ்’ புகழ் சுசித்ரா: “அன்புள்ள மான்விழியே’’ பாடலுடன் சூப்பர் ரீ-எண்ட்ரி

சுசிலீக் மூலம் பிரபலமான சுசித்ரா, அன்புள்ள மான்விழியே பாடல் மூலம் சூப்பர் ரீ எண்ட்ரியாகியுள்ளார். இந்த ஆல்பம் மூலம் அவர் முந்தைய பிரச்னைகளில் இருந்து...

பாடகி சுசித்ராவை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க மாட்டோம். பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு திரையுலகினர் கலங்கியதை மறக்க முடியுமா? அவர் இப்போது என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன், அவர் எப்படி இவ்ளோ பிரபலமானார் என்பதை ஒருமுறை ’ரீகேப்’ செய்துகொள்ளலாம்.

கடந்த மார்ச் மாதம் முழுவதும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த சூடான டாப்பிக் சுசித்ரா. நடிகர் தனுஷ், நடிகைகள் ஆண்ட்ரியா, அமலா பால், பாடகி சின்மயி, இசையமைப்பாளர் அனிருத், சின்னத்திரை தொகுப்பாளர் டி.டி., என திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களும், அவர்கள் தங்கள் இணையரை விட்டு வேறொருவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்களும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ட்வீட்’ செய்யப்பட்டது.

அப்போது, தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என சுசித்ரா விளக்கம் அளித்தார். ஆனால், அவருடைய முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக், மன அழுத்தத்தின் காரணமாக சுசித்ராவின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் கூறி மேலும் அதிர்ச்சி அளித்தார். இந்த சம்பவத்தால் திரையுலகினர் பலரும் சுசித்ரா மீது கடும் அதிருப்தியடைந்தனர்.

இந்த விவகாரத்தால், பல மாதங்கள் திரையுலகைவிட்டு பொதுவெளியில் முகம் காட்டாமல் இருந்த சுசித்ரா அமெரிக்கா சென்று அனைவரிடமிருந்தும் விலகி இருந்தார். இப்போது அனைவரையும் இசை மழையில் நனைய வைக்க தயாராகிவிட்டார், “அன்புள்ள மான்விழியே”-வின் புதிய கிதார் வெர்ஷன் பாடலுடன்.

”அன்புள்ள மான்விழியே” பாடல் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் 1965-ஆம் ஆண்டு இசையமைக்கப்பட்டு ‘குழந்தையும் தெய்வமும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இந்த பாடலை மெல்லிய கிதார் இசையுடன் மனதை கிரங்கடிக்கும் வகையில் தன் வசீகர குரலில் பாடி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார் சுசித்ரா.இந்த பாடலுக்கு வளர்ந்துவரும் கிதார் கலைஞர் நவீன் சாம்சன் பெஞ்சமின் கிதார் வாசித்திருக்கிறார்.

ரொம்ப கூலாக அமர்ந்து பாடலை ரசித்து ரசித்து உதட்டோரம் சிறிய புன்னகையுடன் சுசித்ரா பாடுவதை பார்க்கும்போது, கடந்த கால பிரச்சனைகளிலிருந்து அவர் மீண்டுவிட்டார் என்ற நம்பிக்கை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வரும். அந்த பாடலின் இயல்பு மாறாமல் பாடியதில் முடிந்த வரை பாட்டுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் என்று சொல்லலாம். “அன்புள்ள மான்விழியே” மாதிரி யாராலும் மாற்றியமைக்க முடியாத பாடலை தேர்ந்தெடுத்ததற்கே சுசித்ராவிற்கு சபாஷ் போடலாம்.

எது எப்படியோ, சுசித்ரா மீண்டும் திரையுலகிலும் ரீ-எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் சுசி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close