தூய்மை இந்தியா திட்டம்... கின்னஸ் சாதனை படைத்தது வதோதரா!

தூய்மையான நகரங்களில் பட்டியலில் குஜராத்தில் உள்ள வதோதரா 10-வது இடம்பிடித்தை கொண்டாடும் வகையில் ஏராளமான மக்கள் ஒரே பகுதியில் ஒன்றுசேர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக வதோதரா நகராட்சி ஆணையர் வினோத் ராவ் கூறியதாவது: தாண்டியா மற்றும் அகோடா ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதியில் 5,058 பேர் கூடினர். சாதனைபடைக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அவர்கள் அனைவரும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த கூட்டமானது சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு இருந்தது. இதற்காக அவர்கள் தாங்களுக்குள்ளாகவே 50 பேர் கொண்ட குழுவை அமைத்து தூய்மை படுத்தும் பணியை மேற்கொண்டனர். தூய்மையான நகரங்களில் பட்டியலில் வதோதரா 10-வது இடம் பிடித்ததை கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பிரதமர் நேரந்திரமோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் இது ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

இதனையடுத்து, ஒரே பகுதியில் அதிக பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதற்காக இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்தது. இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், தூய்மையான நகரங்கங்கள் பட்டியலில் வதோதரா 10-வது இடம் பிடித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் வதோதரா மக்கள் அதனை கொண்டாடியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அதனுடன் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

×Close
×Close