’சுனாமியின் பினாமியே’ – மரண மாஸாக வெளியான தமிழ்ப்படம் 2 பாடல் வீடியோ!

நடிகர் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘தமிழ் படம் 2’ படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

By: June 26, 2018, 6:03:50 PM

கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு, அதே இயக்குநர், அதே நடிகர் ஜோடியில் உருவாகி வரும் படம் தமிழ்ப்படம் 2.

தமிழ்ப்படம் 2 முதல் பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. ‘நான் யாருமில்லை’ என்ற பாடலை, படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன் வெளியிட்டுள்ளார். நான் யாருமில்லை என்று தொடங்கும் இந்த பாடலில் பல நடிகர்கள் பொது மேடையில் கூறிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் தேவர் மகன் கமல் ஹாசன் தோற்றத்தில் இருக்கிறார் சிவா. நடிகர் விஷால், சிவ கார்த்திகேயன், விஜய், சிம்பு, மற்றும் கமல் ஹாசன் என பலரையும் இந்த பாடலில் கலாய்த்துள்ளனர்.

குறிப்பாக, பீட்டா, மீத்தேன் திட்டம், போராட்டத்தில் போலீசாரின் நடவடிக்கை, வங்கி கடன் மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்கள் என பல சீரியஸ் விஷயங்கள் காமெடியாக கூறியுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் பார்த்தே ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த பாடலின் வெளியீடு அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

பாடல் வெளியாக 30 நிமிடங்களுக்குள்ளேயே சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Tamil padam 2 video song released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X