திருமண கோலத்தில் புகைப்படும் எடுக்க யாருக்குத் தான் பிடிக்காது! அப்படி, விரும்பி எடுக்கப்படும் புகைப்படமானது கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பலர் அதற்கென ப்ரொபஸ்னல் போட்டோகிராபர்களை கொண்டு போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.
அந்த போட்டோ ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் செய்து ஒரு புதுவிதமான போட்டோவாக மாற்றுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு பெண் என்ன செய்கிறார் என்பதை கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது என்பதோடு, அதிர்ச்சியும் தொற்றிக்கொள்கிறது.
இந்த வீடியோவானது சீனாவில் எடுக்கப்பட்டது. அதில், வரும் மணப்பெண் கொஞ்சம் ரியாலாக போட்டோ எடுத்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார் போலும். இதற்காக அவரது ஆடையில் நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. ஒரு பக்கம் அந்த பெண் போட்டோக்கு போஸ் கொடுக்க, சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த தீ சில நொடிகளில் அந்த பெண்ணின் உடற்பகுதியை நெருங்குகிறது. சட்டென பரவிய அந்த நெருப்பு, தீயணைப்பானைக் கொண்டு அணைக்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook
Web Title:This woman just let her photographer set her wedding dress on fire would you
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!