https://www.youtube.com/embed/tEkNAQKGZaA
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி வெளியானது ‘தனி ஒருவன்’ திரைப்படம். இயக்குனர் மோகன் ராஜாவிற்கு என தனியொரு பிரம்மாண்ட அடையாளத்தை கொடுத்த படம் இது. அதேபோல், அவரது தம்பியான ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமைந்தது. கதை, ஸ்க்ரீன்பிளே, இசை என ஒவ்வொரு ஏரியாவிலும் நூறு சதவீதம் இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஹீரோக்களின் மாஸ் பன்ச்களுக்கு மட்டும் கைத்தட்டி, விசிலடித்து பழக்கப்பட்டிருந்த ரசிகர்கள், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இன்ச் பை இன்ச்சாக விசிலடித்து ரசித்தனர்.
மிக பவர்ஃபுல்லான ஹீரோ, அதைவிட மிகவும் பவர்ஃபுல்லான வில்லன் என்று அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
இப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இயக்குனர் மோகன் ராஜா ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 8 நிமிடம் 40 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், ‘தனி ஒருவன்’ படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook
Web Title:Two years of thanioruvan film special deleted scenes