தீப்பற்றி எரியும் பேருந்து: உயிரை பொருட்படுத்தாமல் உள்ளே சிக்கியிருந்தவரை காப்பாற்றிய நபர்

ஒருவர் பேருந்தின் உள்ளே சிக்கியவரை காப்பாற்றும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சக மனிதருக்கு ஆபத்து நேரும்போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றும் மனிதர்கள் பற்றி நிறைய கேட்டிருப்போம். அப்படித்தான், சீனாவில் தீப்பற்றி எரியும் பேருந்தின் உள்ளே சென்று தன் உயிரை பற்றி கவலைப்படாமல், ஒருவர் பேருந்தின் உள்ளே சிக்கியவரை காப்பாற்றும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் இபிங் நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. அந்த வீடியோவில் நடுவழியில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கடையின் உரிமையாளர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்து உள்ளே சென்று பேருந்தினுள் சிக்கியிருந்த ஒருவரை மீட்டு வெளியே கொண்டுவந்தார்.

யாராக இருந்தாலும் இந்த உதவியைத் தான் செய்திருப்பார்கள் என அந்நபர் கூறினார்.

×Close
×Close