45 வயது பெண் 29 வயது இளைஞருடனான காதலை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் வீடியோ

45 வயது பெண் ஒருவர், 29 வயதுடைய இளைஞர் ஒருவரை காதலிப்பதை தன் வார்த்தைகளால் அழகாக வெளிப்படுத்தியிருக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By: October 26, 2017, 4:21:52 PM

அர்யானா ரோஸ் என்ற 45 வயது பெண் ஒருவர், 29 வயதுடைய இளைஞர் ஒருவரை காதலிப்பதை தன் வார்த்தைகளால் அழகாக வெளிப்படுத்தியிருக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்யானா ரோஸ், முதன் முறையாக ஃப்ரான்சில் உள்ள கிராமமொன்றில் அந்த இளைஞரை சந்தித்தார். அவர், சிறந்த ஓவியர், சிற்பக்கலைஞர், கட்டடக்கலை நிபுணர், இசைவிரும்பி என பன்முகம் கொண்டவர் என விவரிக்கும் அர்யானா ரோஸ், அவர் தனக்கு மரங்களை பற்றியும், அதன் பண்புகள் குறித்தும் சொல்லித்தந்ததாக தெரிவிக்கிறார். அவருடைய செயல்களால், தான் அவர் மீது காதல் கொண்டதாக, அர்யானா ரோஸ் தன்னுடைய உணர்வுகளை அந்த வீடியோவில் வெளிப்படுத்துகிறார்.

ஆனால், தனக்கும் அந்த இளைஞருக்கும் வயது இடைவெளி அதிகம் என்பதால், சங்கடத்திற்கு ஆளானதாக தெரிவிக்கும் அர்யானா ரோஸ், அவர் மீது கொண்ட காதலை கடக்க முடியாமல் தவித்ததாக தெரிவிக்கிறார். இருவரும் சேர்ந்து நெடுந்தூரம் பயணித்திருக்கின்றனர்.
அந்த இளைஞரும் அர்யானாவை காதலித்திருக்கிறார். இருப்பினும், வயது தடையால் அவரைவிட்டு பிரிந்திருக்கிறார் அர்யானா. அதன்பின், 4 வருடங்கள் கழித்து அந்த இளைஞரை அர்யானா சந்தித்த அனுபவம் குறித்தும் அவர் வீடியோவில் பேசியிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Video this 45 yr old woman and 29 yr old mans love story will break your heart

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X