விஜய் சேதுபதியின் ‘ஏ எலும்ப எண்ணி எண்ணி’ பாடலின் லிரிக்ஸ் வீடியோ

‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மொத்தம் 8 கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி.

By: December 19, 2017, 10:26:05 AM

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். நிகாரிகா, காயத்ரி இருவரும் இந்தப் படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, மொத்தம் 8 கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏ எலும்ப எண்ணி எண்ணி’ பாடலின் லிரிக் வீடியோ இது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathis yae elumba enni enni song lyric video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X