விஷாலின் 'சண்டக்கோழி 2' டிரைலர்!

விஷாலின் 'சண்டக்கோழி 2' டிரைலர்

2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், அப்போது யாருக்கும் அதிகம் அறியப்படாத முகமாக இருந்த விஷால் நடித்த படம் ‘சண்டக்கோழி’. ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இப்படம். விஷாலை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக்கிய படம் இது. அதேபோல், இயக்குனர் லிங்குசாமிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

அதன்பின், 13 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகியுள்ளது. அதே லிங்குசாமி இயக்க, விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். ராஜ்கிரண் விஷாலின் அப்பாவாக நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார் படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே, இந்த பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

 

×Close
×Close