சாலையின் குறுக்காக காரை நிறுத்திய சீன போலீஸ்! இப்படியும் செய்யலாம் உதவி

மனதை நெகிழவைக்கும் இந்த வீடியோவானது நெட்டிசன்கள் மத்தியில் உலகளவில் பரவி வருகிறது.

அனைவரும் சாலையை கடந்து செல்கையில், சாலையை கடந்து செல்ல முடியால் தனியாக தவிக்கும் முதியோர்களை நாம் பார்த்திருப்போம். சாலையை கடந்து செல்ல யாராவது தனக்கு உதவி செய்வார்களா என்று காத்திருக்கும் முதியவர்களுக்கு, சிலர் உதவி செய்வதையும் நாம் கண்டிருப்போம். இது அப்படிபட்ட சம்பவம் தான் என்றபோதிலும், கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்கிறார் இந்த போலீஸ் அதிகாரி.

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீஸ் அதிகாரியான லீ காங், முதியவர் ஒருவருக்கு உதவி செய்கிறார். இதற்காக, சாலையில் வரும் கார்களை நிறுத்துவதற்காக, தனது காரையே சாலையின் குறுக்காக நிறுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல், காரில் இருந்து இறங்கி செல்லும் அவர், அந்த முதியவரை அரவணைத்துக் கொண்டு சாலையை கடந்து செல்ல உதவி செய்கிறார்.

மனதை நெகிழவைக்கும் இந்த வீடியோவானது நெட்டிசன்கள் மத்தியில் உலகளவில் பரவி வருகிறது. உதவி செய்ய வேண்டும் என நினைத்தால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உதவி செய்யலாம் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்.

×Close
×Close