வலியால் துடித்த பெண்... காதுக்குள் குடியிருந்த சிலந்தி! (வீடியோ)

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் தாங்கமுடியாத தலைவலியாலும், காதுகளில் ஏதோ அசௌகர்யம் காரணமாக அவதிப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் காதிற்குள் ஒரு சிலந்தி இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்சியடைந்தனர். அதோடு அந்த சிலந்தி உயிருடன் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது: பெங்களூரை சார்ந்த அந்த பெண்ணின் பெயர் லட்சுமி. சம்பவம் நிகழ்ந்த போது அந்த பெண் வீட்டில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கியிருக்கிறார். அவர் எழுந்தபோது, அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதாம். மேலும், காதில் ஏதோ இருப்பது போல உணர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவரது மகளிடம் கூறியுள்ளார்.

அவரது மகள், காதில் டார்ச் அடித்து பார்த்தபோதிலும், காதில் ஒன்றும் தெரியவில்லை.தொடர்ந்து லட்சுமி தாங்கமுடியாத வலியால் துடித்ததையடுத்து, அவரது கணவர், லட்சுமியை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னரே அவரது காதில் சிலந்தி இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவரது காதில் இருந்த சிலந்தியை மருத்துவர்கள் வெளிறேற்றினர்.

×Close
×Close