சீனா: ஓடும் வேனின் எஞ்சினில் தீடீரென பற்றிய தீ... சாமர்த்தியமாக கீழே குதித்து உயிர் தப்பிய நபர் (வீடியோ)

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டாங்குயன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததது. வேனில் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் தனது காரின் எஞ்சினில் தீ பற்றியதையறிந்து காரில் இருந்து கீழே குதிக்கிறார். தொடர்ந்து ஆளே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் அந்த வேன், மற்றொரு பகுதியில் நின்றுகொண்டிருக்கும் கார்கள் மீது மோதுகிறது.

இந்த சம்பவத்தில் அந்த வேனில் இருந்து மற்ற கார்களுக்கும் தீ பரவியது. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் 7 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சி, அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

×Close
×Close