பயணத்தின் போது காரில் பாம்பு... ஒரு திகில் அனுபவம்! (வீடியோ)

நெடுஞ்சாலை பயணத்தின்போது பல திகில் அனுபவங்களையும், சம்பவங்களையும் நாம் கண்டிருப்போம். ஆனால், நாம் பயணம் மேற்கொள்ளும் காரில் பாம்பு ஒன்று பயணம் செய்தால் எப்படி இருக்கும்?

அப்படியும் ஒரு சம்பவ நிகழ்ந்திருக்கிறது. அந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . நெடுஞ்சாலையில் கார் ஒன்று செல்கிறது. அப்போது, அந்த காரின் முன்புறத்தில் இருந்து வரும்  பாம்பு ஒன்று காரின் மேல் மெல்ல  ஊர்ந்து வருகிறது. தொடர்ந்து  காரின் ஜன்னல் பகுதிக்கு வரும் பாம்பு, அப்படியே நைசாக காரினுள்ளும் நுழைய வழிதேடுகிறது. இதற்கு மேல் பாம்பை விட்டால் சரிபட்டு வராது என காரை ஓட்டுபவர்  நினைத்தாரோ என்னவோ, காரை அப்படியே ஓரங்கட்டிவிட்டார்.

 

×Close
×Close