ஹெச்.ராஜாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பாரதிராஜா சொல்வதை கேளுங்கள்

தமிழர்கள் அறவழியில் சிந்திப்பவர்கள். எனவே வழக்கமான எந்த தண்டனையும் கூடாது. தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தமிழகத்தை விட்டு வெளியேற சொல்ல வேண்டும்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் ராஜா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹெச்.ராஜாவின் பதிவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, பிஜேபி தேசிய தலைவரான அமீத் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

திமுகவினர் தமிழகம் முழுவதும் ராஜாவின் கொடும்பாவி எரித்துப் போராடினார்கள். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா சார்பில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைக்கும் வகையில் பேசும் ஹெச்.ராஜாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பேசியிருக்கிறார்.

அதில் தமிழர்கள் அறவழியில் சிந்திப்பவர்கள். எனவே வழக்கமான எந்த தண்டனையும் கூடாது. அவர் பஞ்சம் பிழைக்க வந்தவர். தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை தமிழகத்தை விட்டு வெளியேற சொல்ல வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதன் வீடியோவை காணுங்கள். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

×Close
×Close