Advertisment

‘உண்மையான நாய் நன்றியோடு இருக்கும்’... யாரை சாடுகிறார் சிம்பு?

author-image
WebDesk
New Update

நடிகர் சிம்பு பாடி நடித்திருக்கும் “பெரியார் குத்து” என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் கருப்பு ஆடை அணிந்து சிம்பு நடனம் ஆடியுள்ளார்.

Advertisment

நடிகை ஓவியா நடிக்கும் 90 எம்.எல். படத்தின் பின்னணி இசையில் கவனம் செலுத்தி வருகிறார். பின்னணி இசையமைப்புக்கு இடையே ‘பெரியார் குத்து’ என்ற தலைப்பில் உருவான பாடலையும் சிம்பு பாடியிருந்தார். இந்த பாடலின் டிசர் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது.

மதன் கார்க்கி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு ரமேஷ் தமிழ்மணி இசைமைத்துள்ளார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் இந்த ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த பாடலை தானே பாடியது மட்டுமல்லாமல், அவரே நடனமும் ஆடியுள்ளார். பாடலின் புரமோ வீடியோவை ஆல்பத்தை தயாரிக்கும் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் “உண்மையான நாய் நன்றியோடு இருக்கும்... வேஷம் போட்ட நாய் மானங்கெட்டு குளைக்கும்” எனும் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளது.

Periyar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment