‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இந்திய சினிமாவில் அறிமுகமாகும் படம் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’. இந்தப் படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸாக இருக்கிறது.
இஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 23ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் ரிலீஸாக இருக்கிறது.