கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படம், நாளை முதல் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் மூன்று நிமிட முன்னோட்டக் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சயிஷா சேகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சூரி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளர்.
சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதை, சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் 3 நிமிடக் காட்சியில் சூர்யா விவசாயிகள் குறித்து அதிகளவில் பேசியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து அதிகளவில் பேசப்பட்டு இருக்கோம் என்று இசை வெளியீட்டு விழாவின் போதே நடிகர் கார்த்தியும், அண்ணனும் படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா ஆகியோர் கூறியிருந்தனர்.