ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாச ராவ், விவேக் ஆகியோர் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. 2003ல் இப்படம் ரிலீசாகி இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து இம்மாதம் 21ம் தேதி ரிலீசாக உள்ளது. ஹரி - விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா கதாநாயகிகளாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.