Advertisment

Varma Trailer: ரசிகர்களை திருப்திப்படுத்தியதா பாலாவின் 'வர்மா' டிரைலர்?

author-image
WebDesk
New Update

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

ஓவர் மாஸ், ஓவர் மசாலா, ஓவர் ஆக்டிங், ஓவர் கமர்ஷியல் என்று பல தேவையில்லாத ஆணிகளை வழக்கமாக படங்களில் திணிக்கும் தெலுங்கு திரையுலகத்தில்... அதாவது டோலிவுட்டில் இருந்து வந்த மிராக்கிள் திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ல் ரிலீசான இப்படம், விண்டேஜ் தெலுங்கு சினிமாவை காலி செய்தது. படம் பார்த்தவர்கள் எல்லாம், இந்தப் படத்தை எப்படி தெலுங்குல எடுத்தாங்க?-னு புலம்பாத குறை தான்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சென்சேஷனல் ஹிட் அடித்த இப்படத்தை, தமிழில், விக்ரமின் மகன் துருவை வைத்து பாலா இயக்கியுள்ளார். துருவ்விற்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் நடித்துள்ளனர். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. ரதன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தை குறிவைத்து ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று(ஜன.09) வெளியிடப்பட்டுள்ளது.

Bala Dhruv Vikram Varma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment