Advertisment

லீக்கானது ‘விஜய் 62’ படத்தின் சண்டைக்காட்சி - வீடியோ

‘விஜய் 62’ படத்தின் லீக்டு வீடியோ என சில காட்சிகள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

author-image
cauveri manickam
New Update

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

‘விஜய் 62’ படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், எடிட் செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

‘விஜய் 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை அங்கு படமாக்கி வருகிறார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சிகளை ராம் – லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்நிலையில், ‘விஜய் 62’ படத்தின் லீக்டு வீடியோ என சில காட்சிகள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், பைக்கில் வரும் இருவரை விஜய் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment