Advertisment

இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவுதம் கம்பீர்! டூப்ளிகேட் நபரை வைத்து தேர்தல் பிரச்சாரமா?

உண்மையை நிரூப்பித்தால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gautam Gambhir’s roadshow

Gautam Gambhir’s roadshow

Gautam Gambhir’s roadshow  :  பாஜக சார்பில் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிரச்சாரத்தின் போது தன்னை போலவே இருக்கும் நபரை டூப் போட வைத்து ஓட்டு கேட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisment

முன்னாள் கிரிக்கெட் கவுதம் கம்பீர் பாஜக-வில் இணைந்தார் என்ற செய்தி வெளியான நாள் முதல் அவர் மீது தொடர்ந்து ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். பாஜக சார்பாக கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கவுதம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஆம் ஆத்மியை சேர்ந்த பெண் வேட்பாளரை கவுதம் கம்பீர் தவறான முறையில் விமர்சித்ததாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள கவுதம் கம்பீர் உண்மையை நிரூப்பித்தால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார்.

இதுஒருபுறம் இருக்க, தேர்தல் பிரச்சாரத்தின் போது கவுதம் கம்பீர் டூப்ளிகேட் நபரை வைத்து ஏமாற்றியதாக தற்போது மற்றொரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுக் குறித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவரும் , டெல்லி மாநில துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா “ டெல்லியில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக தன்னை போன்ற வேடமிட்ட ஒருவரை கவுதம் தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் கவுதம் கம்பீர் காரின் உள்ளே அமர்ந்திருக்க மேலே அவரைப் போலவே இருக்கும் மற்றொரு நபர் மக்களிடையே கையை தூக்கி வாக்கு கேட்பது போல் காட்சிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே வைரலானது. இதுக் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது, “கவுதம் கம்பீர் பிரச்சாரம் குறித்து பரவி வரும் புகைப்படம் பொய்யான தகவலுடன் பரபரப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பிரச்சாரத்திற்கு வந்த கவுதம் கம்பீருக்கு உடல் நலம் சரியில்லை.

publive-image

11. 30 மணிக்கு காரில் ஏறிய அவர் மேலே நின்றப்படியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தார். கடுமையான வெயில் காரணமாக திடீரென்று அவரின் உடல்நிலை மோசமானது. அதன் பின்பு தான் அவர் கீழே சென்று காரின் முன்சீட்டில் அமர்ந்துக் கொண்டார். அவருக்கு ஆதரவாக அவரின் 25 ஆண்டு கால நண்பரும், பாஜவின் தொண்டருமான அரோரா என்பவர் காரின் மேலே நின்றப்படி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இருவரும் ஒருவரைப்போலவே உடை அணிந்திருந்ததால் சிலர் அவரை கவுதம் கம்பீர் என நினைத்து உள்ளனர். ஆனால் நாங்கள் டூப்ளிகேட் நபரை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஓட்டு கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

Bjp Social Media Viral Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment