இந்திய பெற்றோர்களின் பிள்ளைகளா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த 'ட்வீட்'டுகள் புரியும்

நமக்கு தனிமை என்றால் சமூக வலைத்தளங்களில் மட்டும்தான். இங்கு இந்திய பெற்றோர்கள் குறித்து ட்விட்டரில் கொஞ்சம் காமெடியாக சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.

இந்திய பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக இருப்பவர்கள் பெரும்பாலானோர் எப்போதும் கட்டளைகளுக்கும், பெற்றோர்களின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டாக வேண்டும். நீங்கள் எவ்வளவு வளர்ந்தவராக இருந்தாலும் உங்கள் பெற்றோருக்கு குழந்தைதான். அவர்கள் உங்களுக்கு அறிவுரைகள் மட்டும் வழங்க மட்டார்கள். மாறாக கட்டளையிடுவார்கள்.

நமக்கென நம் பெற்றோர் வைத்த செல்லப்பெயர் கூட பொதுத்தளத்தில் கூப்பிடும்போது நமக்கு கொஞ்சம் சங்கடமாக அமைந்துவிடும். இதை எல்லோரும் ஒரு தருணத்தில் கடந்து வந்திருப்போம்.

எப்போதுமே தங்கள் பிள்ளைகள் மென்மையாகவே இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்களும், வங்கிகளில் நிறைய பணம் இருக்க வேண்டும் எனவும் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவார்கள்.

நமக்கென தனிமைய கூட அனுபவிக்க விட மாட்டார்கள். நமக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் கண்காணித்துக் கொன்டே இருப்பார்கள்.

நமக்கு தனிமை என்றால் சமூக வலைத்தளங்களில் மட்டும்தான். இங்கு இந்திய பெற்றோர்கள் குறித்து ட்விட்டரில் கொஞ்சம் காமெடியாக சிலர் பதிவிட்டிருக்கின்றனர். என்.ஆர்.ஐ. பெற்றோரர்களின் பிள்ளைகள் கூட சிலர் பெற்றோர்கள் குறித்து பதிவிட்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்திய பெற்றோர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் குண நலன்கள், மன நிலைமை இந்தியாவில் இருப்பது போலத்தான் இருக்கின்றன.

நாங்கள் முதல் பார்வையிலேயே திருமணத்தை நிச்சயித்துவிடுவோம் – இந்திய பெற்றோர்கள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close