கழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்

ஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.

மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது, கழிவறையை உபயோகிக்க வேண்டும் என எண்ணினால், ஏதேனும் பொது கழிவறை அருகில் உள்ளதா என தேடுவோம். அப்படி இல்லையென்றால், அருகிலுள்ள உணவகங்களுக்கு சென்று அங்குள்ள கழிவறையை பலரும் பயன்படுத்துவர். இதற்கு உணவகங்களில் கட்டணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். ஆனால், இனிமேல் உணவகங்களுக்கு சென்று கழிவறையை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் போல.

ஏனென்றால், சமீபத்தில் ஈரோட்டில் உள்ள ’ருக்மணி அம்மாள் ஃபுட்ஸ்’ எனும் உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி, பார்சல் கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம். அந்த கட்டணத்தின் புகைப்படத்தை அவர் <ahref=”//www.reddit.com/r/india/comments/7ujc0v/when_restaurants_start_charging_you_for_just/”>redd.it எனும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.

அந்த கட்டணத்தில், கட்டணம் ரூ.10, பார்சல் கட்டணம் 50 பைசா, மாநில ஜிஎஸ்டி 26 பைசா, மத்திய ஜிஎஸ்டி 26 பைசா, என மொத்த கட்டணம் 11 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறையை உபயோகித்ததற்காக ஜிஎஸ்டி வரியுடன் பில் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close