ரோபோசங்கர் மனசளவில் பெரிய மனிஷன் தான்.. தங்க மகள் கோமதிக்கு 1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தார்.

நானும் கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்தவன் தான்.

actor Robo Shankar video : ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபோ சங்கர் 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக செய்தித்தாள் தொடங்கி சமூகவலைத்தளங்கள் என எந்த பக்கம் திரும்பினாலும் கோமதி மாரிமுத்து குறித்த பேச்சு தான். தோகாவில் நடைபெற்ற 23-வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தந்தையை இழந்தும் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கும் கோமதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாளை தாயகம் திரும்பும் கோமதிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்த கோமதியின் மின்னல் ஓட்டம் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் முதல் ஆளாக கோமதிக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். கோமதிக்கு தமிழக அரசு இன்னும் பரிசுத் தொகையை அறிவிக்காத நிலையில் ரோபோ சங்கர் கோமதிக்கு அன்பளிப்பாக ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். இதுக் குறித்து ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“ தந்தையை இழந்து, பயிற்சியாளரையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் விடா முயற்சியால் கோமதி செய்த பயிற்சிக்கு கிடைத்த பரிசே இந்த தங்கம்.தங்க மங்கை கோமதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நானும் கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்தவன் தான். அதன் கஷ்டம் எனக்கும் தெரியும்.

கோமதி அவர்களுக்கு என்னுடைய சிறிய அன்பு பரிசாக ரூ.1 லட்சம் கொடுப்பதைப் பெருமையாக நினைத்துக்கொள்கிறேன். மேலும் இவருடைய வெற்றி பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். ரோபோ சங்கரின் இந்த முயற்சிக்கு சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close