இதற்கு தான் சிம்பு வேண்டும்...புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்படியொரு ஐடியாவை யாரும் சொல்லவில்லை!

நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேர்கிறதா இல்லையா?

கஜ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் கைக்கொடுத்து உதவும் வகையில் நடிகர் சிம்பு மிகச் சிறந்த ஐடியா ஒன்றை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

சிம்பு ஐடியா:

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்றுக் கொண்டிருந்த  நடிகர் சிம்பு. சமீப காலமாக அரசியல், சினிமா, போராட்டம் குறித்த கருத்துக்களை  அதிரடியாக தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி காவிரி விவகாரம் வரை  தமிழகத்தில் நடைப்பெறும் அனைத்து விதமான அரசியல்  பிரச்சனைகளிலும் சிம்பு கருத்து  தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  கர்நாடகாவில் இருந்து காவிரி பெறுவதற்கு புதுவிதமான ஐடியாவை சொன்னார். முதலில் அவரின் பேச்சு பலரையும் சிரிக்க வைத்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவர் சொன்னதுன் அப்படியே நிகழ்ந்தது.   கர்நாடகா மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீரை வழங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

இந்த நிகழ்விற்கு பிறகு பலரின் கவனமும் சிம்பு பக்கம் திரும்பியது. இந்நிலையில், கடந்த வாரம் தமிழகத்தையே புரட்டிப் போட்ட  கஜா புயல் சேதம்  எண்ணில் அடாங்காதவை.   சேதத்தை கண்டு கலங்கி நிற்கும்  டெல்டா மாவட்டங்களை கைக்கொடுத்து தூக்க சினிமா பிரபலங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் என பலரும் பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் ஐடியா ஒன்றையும் கூறி அனைவரின் கவனத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.  காரில் சென்றுக் கொண்டே நடிகர் சிம்பு பேசிய வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

“கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகிறார்கள். இது போன்று எப்பொழுது நடந்தாலும் பலரும் உதவி செய்கிறார்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய நினைத்தாலும் நாம் கொடுக்கும் காசு அங்கு போய் சேர்கிறதா இல்லையா, சேர்ந்த காசு அவர்களுக்கு எப்படி உதவியாக உள்ளது என்பது எல்லாம் நமக்கு தெரிவது இல்லை. இது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து கொண்டே இருக்கு.

தமிழக மக்கள் அனைவரும் உதவி செய்ய எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அது என்னவென்றால், நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறோம் , ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் செலவு செய்கிறோம். இயன்றவர்கள் 100 ருபாயோ, இல்லாதவர்கள் 10 ரூபாயோ செல்போன் நெட்வொர்க் மூலம் கொடுக்க முடியும்.

எல்லா நெட்வொர்க்கும் சேர்ந்து யார், யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டி, அதை அரசு ஏற்று அந்த பணத்தை டெல்டா பகுதிக்கு இப்படி செலவு செய்தோம் என்ற கணக்கு காட்டுவதாக இருந்தால் இந்த விஷயத்தை செய்யலாம் என்பதை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் தெரிவித்துள்ள ஐடியா சரியாக இருந்தால் #UniteForHumanity #UniteForDelta என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யுங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் நாம் நன்கொடை அளித்து உதவி செய்வோம் ” என்று கூறியுள்ளார்.

சிம்புவின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவின் ஐடியாவை பலரும் பாராட்டியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close