டெங்குவை ஒழிக்க பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பரமாக தயாரித்து தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. நடிகை சுஜா, நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்த விளம்பரங்களில் பொதுநல நோக்குடன் நடித்துள்ளனர்.
விவேக் தோன்றிய டெங்கு விழிப்புணர்வு விளம்பரத்தில், நகைச்சுவையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், குப்பைகள் தேங்காமலிருத்தல், நமது சுற்றுப்புறத்திலுள்ள குப்பைகளை நாமே அகற்ற வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
இந்த விளம்பரத்தில் விவேக்கின் மேலாளரான நடிகர் செல் முருகனும் இணைந்துள்ளது, அந்த விளம்பரத்தை கூடுதல் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, கொசுவை ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டும், அரசுடன் கைகோர்த்து இத்தகைய பணிகளில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை இந்த விளம்பரம் நகைச்சுவையாக உணர்த்துகிறது.