Advertisment

பாய் ஃப்ரண்ட்-ஐ உப்பு மூடை தூக்கிய பிரியா பவானி சங்கர்: வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சி உப்பு மூடை தூக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress Priya Bhavani Shankar, actress Priya Bhavani Shankar video goes viral, Priya Bhavani Shankar plays with boy friend video, பாய் ஃப்ரண்ட்-ஐ உப்பு மூடை தூக்கிய பிரியா பவானி சங்கர், பிரியா பவானி சங்கர் வைரல் வீடியோ, actress Priya Bhavani Shankar plays with boy friend video goes viral

நடிகை பிரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar viral video: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சி உப்பு மூடை தூக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, அருள்நிதியின் ‘டிமான்டி காலனி’ உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். பிரியா பவானி தனது காதலனின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது காதலனை கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், தனது காதலனை உப்பு மூடை தூக்கிய காட்சி ரசிகர்களை ஈர்த்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் காதலனின் நண்பர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

பிரியா பவானி சங்கர் காதலனுடன் கொஞ்சி விளையாடுவது, சாப்பிடுவது, டான்ஸ் ஆடுவது, பாடுவது மற்றும் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Priya Bhavani Shankar Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment