திருமணம் செய்து கொள்ள “டேக்ஸா” சவாரி செய்த ஜோடிகள்… கேரள வெள்ளத்தின் நடுவே சுவாரசியம்

எந்த காரணம் கொண்டும் வாழ்வின் முக்கியமான நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்று இப்படி ரிஸ்க் எடுத்து திருமணம் செய்துள்ளனர்.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

Viral News : “பிச்சை எடுக்க விரும்பவில்லை…” தள்ளாத வயதில் பேனா விற்கும் பாட்டி

இந்நிலையில் தாளவாடி பகுதியில் தங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர் ஆகாஷ், ஐஸ்வர்யா ஜோடி. ஆனால் கனமழை பெய்த காரணத்தால் தெரு முழுவதும் வெள்ள நீர் சுழ, என்ன செய்வது என்று அறியாமல் அந்த ஜோடிகள் உணவு சமைக்க பயன்படுத்தும் டேக்ஸாவில் பயணித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பே தங்களின் திருமணத்திற்காக கோவிலுக்கு வந்துவிட்டனர் அவர்கள். திங்கள் கிழமை அன்று திருமணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. எந்த காரணம் கொண்டும் வாழ்வின் முக்கியமான நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்று இப்படி ரிஸ்க் எடுத்து திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amid floods in kerala bride and groom arrive on cooking vessel at wedding venue

Next Story
கேன்சரால் உயிரிழந்த சிறுமி… கல்நெஞ்சக்கார தந்தையிடம் பணஉதவி கேட்டு கெஞ்சிய விடியோ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com