Advertisment

பிபின் ராவத்திற்கு “கார்டூன்” மூலம் அஞ்சலி செலுத்திய அமுல்

வெலிங்டன் ஹெலிபேடுக்கு வெறும் 10 கி.மீ தூரமே இருக்கின்ற நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி எரிந்து சாம்பலானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த சவுரிய சக்ரா விருது பெற்ற க்ரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்.

author-image
WebDesk
New Update
Amul pays homage to General Bipin Rawat in latest topical

Amul pays homage to General Bipin Rawat : புதன் கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்கடன் ராணுவ முகாமிற்கு சென்ற போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைத் தளபதி மற்றும் 12 நபர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை அலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் இருந்து அவர்களது உடல் டெல்லி எடுத்துச் செல்லப்படும் போது பலரும் தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர்.

Advertisment

இன்று டெல்லியில் அனைவரின் உடல்களுக்கும் பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பிரபலமான பால் பொருட்கள் நிறுவனமான அமுல் நிறுவனம் தன்னுடைய அஞ்சலியை வழக்கம் போல் வித்தியாசமான முறையில் சிறப்பு சித்திரத்தின் மூலம் பதிவு செய்துள்ளது. கறுப்பு வெள்ளை கார்ட்டூனாக வெளியிடப்பட்டுள்ள அந்த சித்திரத்தில் “இதர ராணுவ வீரர்களுக்கெல்லாம் நண்பனாகவும், எதிர்களை அச்சுறுத்தும் வாளாகவும் ராவத் திக்ழந்தார் என்று கூறியுள்ளது.

63 வயதான ராவத் தன்னுடைய மனைவியும் பாதுகாப்பு படையினரின் மனைவிகள் நலனுக்கான சங்கத்தின் தலைவருமான மதுலிக்கா ராவத், 4 க்ரூ உறுப்பினர்கள் என 13 நபர்களுடன் பயணம் செய்தார். வெலிங்டன் ஹெலிபேடுக்கு வெறும் 10 கி.மீ தூரமே இருக்கின்ற நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி எரிந்து சாம்பலானது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த சவுரிய சக்ரா விருது பெற்ற க்ரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment