Advertisment

அவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..!' போலீஸ் நிலையத்தில் பொடிசுகள் பஞ்சாயத்து

பென்சிலை அனுமதியின்றி எடுத்துவிட்டதாக சகமாணவன் மீது பள்ளி சிறுவன் புகார் அளித்த சம்பவம் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
அவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..!' போலீஸ் நிலையத்தில் பொடிசுகள்  பஞ்சாயத்து

Tamil School Childrens Viral Video : குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை ரசிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு அதிகமான கோபத்தில் இருந்தால், அந்த இடத்தில் ஒரு குழந்தை குறும்பு செய்யும்போது அந்த இடமே சிரிப்பலையில் நிறைந்திருக்கும். குழந்கதைகள் விளையாட்டாகவோ, அல்லது சீரியசாகவே எது செய்தாலும் அதனை பார்ப்பவர்களுக்கு காமெடியாகவே தெரியும். ஆனாலும் அது ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

Advertisment

அந்த வகையில் பள்ளி சிறுவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவன் மீது வழக்கு தொடரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில், அனுமதியின்றி தனது பென்சில் எடுத்துச்சென்றதாக தனது வகுப்புத் தோழன் மீது புகார் அளித்த சிறுவன், சக மாணவன் மீது வழக்கு தொடரும்படி போலீசாரிடம் கூறுகிறான்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெடா கடுபுரு காவல் நிலையத்தில், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் சிலர் புகார் அளிக்க வந்துள்ளனர். அதில் ஒரு மாணவர்,  ஒரு மாணவனை கைகாட்டி பல நாட்களாக தன்னிடம் இருந்து பென்சில் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துச்சென்றதாகவும், தற்போது இந்த விஷயத்தை காவல்துறையினரிடம் சொல்ல வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்

மேலும் சிறுவன் வழக்குப் பதிவு செய்ய புகார் அளித்த சிறுவன் வற்புறுத்தியபோதும், ​​​​தவறு செய்த பையன் சிறைக்கு அனுப்பப்படுவதோடு அவனுக்கு வாழ்க்கை கடினமாகிவிடும் என்பதால் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட போலீசார் இரு மாணவர்களையும் சமாதானம் செய்து கைகுலுக்குமாறு கேட்டுக்கொண்டதால் மற்ற குழந்தைகள் சிரிப்பலையில் மூழ்கினர்.

மாணவன் சமாதானத்துடன் கைகுலுக்கிய பிறகும், வழக்குப் பதிவு செய்து பெற்றோரை அழைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தான். ஆனாலும் இதே குற்றம் மீண்டும் ஒரு முறை நடக்காது என்று போலீஸ் அதிகாரி உறுதியளித்தார். அதன்பிறகு சிறுவர்கள் அனைவரையும் நன்றாகப் படிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்,

சிறுவாகளின் இந்த செயல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நட்பாகக் கவனித்து சேவை செய்யும் காவல்துறை மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. இந்த செயல்ககள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு அதிக பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில் காவல்துறையை அதிக பொறுப்பாக ஆக்குகிறது, ”என்று காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இநத வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சிறுவர்கள் மிகவும் எளிதாக காவலர்களுடன் பழகுவதைக் கண்டு பலர் ஆச்சரியமடைந்தனர் மற்றும் அவர்களின் விழிப்புணர்வுக்காக அவர்களைப் பாராட்டினர். அந்தச் சிறுவன் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக வளர்ந்து விடுவானோ என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment