Advertisment

ஜாக்கிரதையாக இருங்கள்: உடை மாற்றும் இடங்களில் உள்ள இந்த கொக்கிகள், ஸ்பை கேமராவாக இருக்கலாம்

ஆங்கர்கள்போன்று தோற்றமளிக்கும் கொக்கிகளில், கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாதனம் ஒன்று, மார்க்கெட்டுகளில் மிக எளிதில் கிடைக்கிறது

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
spy camera, security

துணிக்கடைகள், மால்கள், உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில், உடை மாற்றும் இடங்கள், பாத்ரூம்களில், ஸ்மோக் அலாரம் உள்ளிட்டவற்றில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் நம்மை எச்சரித்திருப்பர். மேலும், இருபக்க கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்குமா? என்ற அச்சமும் வெளியிடங்களுக்கு செல்லும்போது தோன்றும்.

Advertisment

இப்போது, ’ஹூக்’குகள் அல்லது ஆடைகளை மாட்ட பயன்படுத்தப்படும் ஆங்கர்கள்போன்று தோற்றமளிக்கும் கொக்கிகளில், கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாதனம் ஒன்று, மார்க்கெட்டுகளில் மிக எளிதில் கிடைக்கிறது. அந்த கேமராவில், மைக், மெமரி கார்டு உள்ளிட்டவையும் இருக்கும். இந்த கேமரா, அப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்யும்.

இத்தகைய கேமராக்கள், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கின்றன என சொன்னாலும், அவை தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

 spy camera, security

இவை மார்க்கெட்டுகளில் மிக எளிதாக கிடைக்கக்கூடிய சாதனமாக உள்ளது. ஆன்லைனிலும் வாங்க முடியும். ரூ.1,300 முதல் ரூ.5,500 வரை கிடைக்கும். மோஷன் சென்சார், எச்.டி.கேமரா, 32 ஜிபி வரை மெமரி கார்டு பொருத்தக்கூடிய வசதி, பிளாஷ் லைட் இல்லாமலேயே செயல்படும் திறன் ஆகியவை இந்த கேமராவின் ‘சிறப்பம்சங்களாக’ உள்ளது. மெமரி கார்டு மூலம், அதில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஒரு நபர் மிக எளிதில் திருட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 spy camera, security

இந்த கேமரா எப்படி இருக்கும்? எப்படி செயல்படுகிறது என்பதை பாருங்கள்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment