”தென்னிந்திய திரையுலகில் நாயகிகள் பருமனாக இருக்கவேண்டும் என விரும்புவார்கள்”: சர்ச்சைக்குள்ளான பிக் பாஸ் நடிகையின் கருத்து

”தென்னிந்திய திரையுலகில் இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகள் சற்றே பருமனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்”,

By: Updated: August 30, 2018, 10:39:58 AM

”தென்னிந்திய திரையுலகில் இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகள் சற்றே பருமனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்”, என இந்தி தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்-11 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஹினா கான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-11 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, சின்னத்திரை நடிகை ஹினா கான், தன் சக போட்டியாளர்களிடம் பேசிகொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “தென்னிந்திய திரையுலகில் இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகள் சற்றே பருமனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர். எனக்கு தென்னிந்திய இயக்குநர் ஒருவரிடமிருந்து 2 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என கூறினார். அதனால், அந்த பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன். மகேஷ் பாபு – வெங்கடேஷ் கூட்டணியில் உருவான அத்திரைப்படம் மிகவும் ஹிட் ஆனது. அதற்காக பின்னாளில் வருந்தினேன்”, என கூறினார்.

தென்னிந்திய திரையுலகம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை குஷ்பு, ”எப்படி பெண்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை தென்னிந்திய திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான், அவர்கள் அதே நிலையிலும், நம் பெண்கள் அதைத்தாண்டியும் வளர்ந்துகொண்டிருக்கின்றனர்”, என தெரிவித்தார்.

இதேபோல், இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை ஹன்சிகா மோத்வானி, “ஹினா கான் சொல்வது முட்டாள் தனமானது. ஹினாகான், எங்களை நீங்கள் தரம் தாழ்த்தி பேசுவது உங்களுக்குத்தான் அவமானம்”, என கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 11 hina khan body shames south indian actresses twitter reacts angrily

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X