Advertisment

'பிகில்' சிங்கப் பெண்களின் டிக் டாக் - இந்த கூத்து விஜய்க்கு தெரியுமா? (வீடியோ உள்ளே)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பிகில்' சிங்கப் பெண்களின் டிக் டாக் - இந்த கூத்து விஜய்க்கு தெரியுமா? (வீடியோ உள்ளே)

'பிகில்' சிங்கப் பெண்களின் டிக் டாக் - இந்த கூத்து விஜய்க்கு தெரியுமா? (வீடியோ உள்ளே)

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் குறை வைக்கவில்லை. விநியோகஸ்தர்களும் போட்ட பணத்தை எடுத்துவிடத்தாகவே கூறப்படுகிறது.

Advertisment

படம் வெளியாகி ஒரு மாதம் நெருங்க உள்ள நிலையில், இந்தப் படம் வசூலில் உலக உளவில் ரூ.300 கோடியை எட்டும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும் படிக்க - 1992-ல் தேவர்மகன், 2019-ல் பிகில் : பழைய இந்தியா, புதிய இந்தியா ?

பிகில் படம் கடந்த 4 வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 142.75 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் தமிழகத்தில் ரூ.140 கோடி வசூலித்திருந்தது. இதன் மூலம், விஜய்யின் பிகில் படம் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் படிக்க - தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விஜய்யின் ’பிகில்’!

கேரளாவில் பிகில் படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.19.65 கோடி வசூலித்து இதற்கு முந்தைய விக்ரம் நடித்த ஐ படத்தி அதிக சாதனையை முறியடித்துள்ளது. சினிமா வர்த்தக ஆய்வாளர்களின் கருத்துப்படி, பிகில் படம் விரைவில் உலக அளவில் வசூலில் ரூ.300 கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

வசூல் நிலவரம் ஒருபக்கம் சென்றுக் கொண்டிருக்க, பிகில் படத்தின் சிங்கப் பெண்களின் டிக் டாக் வீடியோ ஒருபக்கம் வைரலாகி வருகிறது.

டக்கு டக்குன்னு கோல் மட்டும் போடுவோம்-னு நினைச்சியா.. டிக் டாக்கும் போடுவோம்!

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment