Advertisment

பாஜக எம்.பி. மீது காலணி வீச்சு... செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு

 இதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP MP GVL Narasimha Rao attacked by Shoe in Delhi

BJP MP GVL Narasimha Rao attacked by Shoe in Delhi

BJP MP GVL Narasimha Rao attacked by shoe : டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் எம்.பியுமான ஜி.வி.எல். நரசிம்மராவ் உட்பட நிறைய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

Advertisment

செய்தியாளர்களை சந்தித்து பேசிய நரசிம்மராவ், மத்தியப்பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் சாத்வி பிரக்யா தக்கூர் சிங் குறித்தும், அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான நிலைப்பாடு குறித்தும் பேசினார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் மீது தேவையற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், காலணி ஒன்றை நரசிம்மராவ் மீது வீசியுள்ளார் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர்.

ஜி.வி.எல். தாக்கப்பட்ட வீடியோ

அது நரசிம்மராவ் மீது படவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற சில மணித்துளிகளுக்குள் அவரை கட்சியினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.   இதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment