Advertisment

கெத்துன்னா இதுதான்… ஃபுல் மேக்கப்பில் மணமேடைக்கு புல்லட்டில் பறந்து வந்த மணமகள்!

அனைவருக்கும் தங்கள் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என ஆயிரம் கனவுகள் இருக்கலாம். இந்த மணப்பெண் மிகவும் வித்தியாசமாக, ஃபுல் மேக்கப்பில் மணமேடைக்கு புல்லட்டில் பறந்து சென்ற வீடியோவைப் பார்ப்பவர்கள் கெத்துன்னா இதுதான் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
bride mass entry to marriage stage, bride rides bullet, viral video, bride flying by bike

எல்லோருக்கும் தங்கள் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என ஆயிரம் கனவுகள் இருக்கலாம். ஆனால், இந்த பெண் மிகவும் வித்தியாசமாக, ஃபுல் மேக்கப்பில் மணமேடைக்கு புல்லட்டில் பறந்து சென்றுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கெத்துன்னா இதுதான் என்று மணப்பெண்ணுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment

திருமணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. வாழ்க்கையில் இன்னொருவருடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கும் நாள். அதனால்தான், எல்லோருக்கும் தங்கள் துணை இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதே நேரத்தில் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்ற கனவுகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.

publive-image

அறிவியலும் தொழில்நுட்பமும் பெருகிவிட்ட இந்த காலத்தில் மணமக்கள் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும், மணமேடையில் எப்படி எண்ட்ரி கொடுக்க வேண்டும் என எல்லாவற்றையும் முன்னரே திட்டமிட்டு எண்ட்ரி கொடுத்து அனைவரையும் வியக்க வைக்கிறார்கள். அப்படி, சமீப ஆண்டுகளாக மணமகள் வித்தியாசமாக மணமேடைக்கு எண்ட்ரி கொடுக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படி மணமகள்கள் பட்டயக் கிளப்பும் குத்து டான்ஸ் உடன் மணமேடைக்கு எண்ட்ரி கொடுத்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களை கலக்கி இருக்கிறது .

அந்த வகையில், ஒரு மணப்பெண் ஃபுல் மேக்கப் உடன் மணமேடைக்கு புல்லட்டில் பறந்து சென்று கெத்து காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் திருமண ஆடைகளை அணிந்துகொண்டு ஃபுல் மேக்கப்பில் அசால்டாக புல்லெட்டை ஓட்டிக்கொண்டு மணமேடைக்கு எண்ட்ரி கொடுக்க பறந்துள்ள வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தியுள்ளது.

தனது திருமணத்தின்போது, மாஸாக எண்ட்ரி கொடுக்க நினைத்த இந்த பெண், ஃபுல் மேக்கப் போட்டுகொண்டு லெஹங்காவில் புல்லெட் ஓட்டி மணமண்டபத்தை அடைந்து வீடியோ வெளியிட்டு அசத்தி இருக்கிறார்.

இந்த வீடியோவைப் பற்றி குறிப்பிடுகையில், புல்லெட்டில் செல்ல மணமகள் தன் தந்தையிடம் அடம் பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மணப்பெண் புல்லட்டின் மேல் அமர்ந்து லெஹங்காவை சரிசெய்யுமாறு அருகில் நின்றவர்களிடம் கூறுகிறார். ஆனால், அதற்கு யாரோ ஒருவர் ஏதோ ஒன்று சொல்கிறார். ஆனாலும், மணப்பெண், ‘பரவாயில்லை​..இருக்கட்டும்’ என மறுத்து விட்டு, மணப்பெண் திருமண மண்டபத்துக்கு புல்லெட்டில் சாலையில் பறக்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ deera.makeovers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. மணப்பெண் ஃபுல் மேக்கப்பில் லெஹங்கா அணித்து மணமேடைக்கு புல்லட்டில் பறந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கெத்துன்னா இதுதான் என்று மணமகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். நீங்களே பாருங்கள் கெத்துன்னா இதுதான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment