Advertisment

ஊருக்குள் புகுந்த சிங்கங்களை தெறிக்கவிட்ட காளை - குஜராத்தில் அரங்கேறிய “அதிரடி” சம்பவம்

வாழ்விடங்கள் சுருங்குவது மட்டுமின்றி உணவுப் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.

author-image
WebDesk
New Update
Bull drives off two lioness in Gujarat village

Bull drives off two lioness in Gujarat village : காடுகளில் போதுமான உணவு இல்லாத காலங்களில் வனவிலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையான ஒன்று. குஜராத் மாநிலத்தில் உள்ள விசாவர்தர் தாலுக்காவில் அமைந்திருக்கும் மோடா ஹத்மாதியா கிராமத்தில் இரண்டு இளம் சிங்கங்கள் நடமாடியது ஜுனாகத் தெருவில் மாட்டப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

எஸ்.ஐ. தேர்வுக்கு சிட்டி ரோபோ ரேஞ்சுக்கு வந்த தேர்வர்; பிட்-அடித்து கையும் களவுமாக சிக்கிய இளைஞர்

இந்த இரண்டு சிங்கங்களும் அங்கே உள்ள காளை மாட்டை தாக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கு சிறிதும் சளைக்காத அந்த காளை தன்னுடைய கொம்புகளை கொண்டு சிங்கங்களை மிரட்டியும் விரட்டவும் ஆரம்பித்தது.

ஆனால் இறுதியில் இந்த இரண்டு சிங்கங்களையும் விரட்டி விட்டு வேறு பாதுகாப்பான பகுதிக்கு சென்றுவிட்டது இந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.

மோசமான திருமண பந்தத்தில் இருந்து வெளியேறிய தாய்! 15 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைத்த மகள்

காளை மட்டும் சாலையில் தனியாக இருக்கிறது என்றும், இன்னும் இந்த சிங்கங்கள் வேட்டையாடும் அளவிற்கு அனுபவம் பெறும் வயதைப் பெறவில்லை என்றும் வாதித்து வருகின்றனர். ஆனால் சிங்கங்கள் கிராமத்திற்குள் வந்தது அங்குள்ள அனைவரையும் ஒரு வித அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment