புலியை மிரள வைத்த பூனை... பெண்ணிடம் புலம்பி தள்ளிய புலி!!!

வெளிநாட்டில் பூனையால் மிரண்டுபோன புலிக் குட்டி தனது வளர்ப்பு பெண்ணிடம் அழுது புலம்பும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

வெளிநாட்டில் ஒரு பெண் தனது இல்லத்தில் ஒரு பூனை மற்றும் புலிக் குட்டியை வளர்த்து வருகிறார். ஆசையாய் வளர்க்கப்படும் அந்த இரண்டு விலங்குகளும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது வழக்கம். அவ்வாறு விளையாடும்போது புலிக் குட்டியை அங்குள்ள பூனை மிரள வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பூனையுடன் விளையாடப் புலி நெருங்குகிறது. அப்போது சற்றும் எதிர் பாராமல், புலியின் தலையில் ஒரு அடி வைத்தது பூனை. இதனால் மிரண்டுபோன புலி, மீண்டும் வளர்ப்பு பெண்ணிடம் சென்று மடியில் படுத்துக்கொண்டது.

மடியில் படுத்தவாறு பூனை அடித்ததைப் புலம்புகிறது புலி. உடனே அந்தப் பெண் சோகமாக இருக்கும் புலியை சமாதானம் செய்கிறார். இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

FOTTUTA TIGRE DI MERDA TORNA DALLA TUA PADRONA!

Posted by Darwinite on 31 मार्च 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close