Advertisment

“மங்களாவுக்கு” கண்ணில் புரை... தொடர் சவால்களை சந்திக்கும் 15 மாத புலிக்குட்டி

பிறந்த கொஞ்சம் நாட்களிலேயே தாயை பிரிந்தது. முன்னங்கால்கள் செயல்படாமல் நடப்பதில் சிரமத்தை சந்தித்தது. நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வேட்டையாடவும் பயிற்சிகளை பெற்றது இந்த புலிக்குட்டி. ஆனால் தற்போது கண்ணில் புரை ஏற்பட்டிருப்பதால் சரியாக வேட்டையாட முடியாமல் தவித்து வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Cataract found in 15 months old Mangala tiger

Cataract found in 15 months old Mangala tiger in Thekkady : கேரளாவின் தேக்கடி புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் தாயை விட்டு பிரிந்த புலிக்குட்டி ஒன்றுக்கு மங்களா என்று பெயர் சூட்டியுள்ளனர் கேரள வனத்துறையினர். அந்த புலிக்குட்டிக்கு கண் புரை நோய் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

925 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 56 புலிகள் (2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி) உள்ளன. மங்கலதேவி வனச்சரக பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தாயை விட்டு பிரிந்த ஒரு புலிக்குட்டி தனியே சுற்றித்திருந்த நிலையில் அதனை வனத்துறையினர் மீட்டனர்.

அந்த புலியை தாயுடன் சேர்க்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்ற போதிலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் ஷியாம் சந்திரன் தலைமையில் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு புலிக்கு தேவையான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்னங்கால்கள் சரிவர செயல்படாத காரணத்தால் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. புலியின் வளரிளம் வயதில் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய பால் தயாரிக்கப்பட்டு மங்களாவுக்கு வழங்கப்பட்டது.

இயற்கையாக இரை தேடும் பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரூ. 50 லட்சம் செலவில் மங்களாவிற்காக 10 ஆயிர அடி அகலத்தில் 22 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கூண்டு அமைக்கப்பட்டது . புலிக்குட்டிக்கு இரை தேடும் பயிற்சிக்காக முதலில் கோழி, முயல் என சிறிய வகை விலங்கினங்கள் கூண்டிற்குள் விடப்பட்டு, நாளடைவில் சிறிய மான்களில் துவங்கி புலிக்கு பிடித்த இதர விலங்கினங்கள் கூண்டிற்குள் விடப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கண்களில் புரை உருவாகி இருக்கும் காரணத்தால் புலியால் இயல்பாக செயல்பட இயலவில்லை என்று மருத்துவர்கள் சோதனைக்கு பிறகு தெரிவித்தனர். இதையடுத்து அதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் அருண் ஜகாரியா தலைமையில் 6 பேர் கொண்ட குழு புலிக்கு சிகிச்சை நடத்தி வருகின்றனர். ஆய்வுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து லானோ ஸ்டெரால் என்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 40 கிலோ எடையுடன் இருக்கும் இந்த புலிக்குட்டிக்கு கண்புரை தவிர வேறெந்த பிரச்சனைகளும் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கண் புரை நோய் முழுவதும் குணமான பின் புலிக்குட்டி மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment