இடுப்பளவு மழைநீர்; குழந்தைகளை தோளில் தூக்கி சுமக்கும் பெற்றோர்கள் - கண் கலங்க வைக்கும் வீடியோ
12 பேர் மரணம் அடைந்த நிலையில் மீதம் உள்ள அனைவரும் பத்திரமாக ரயில் நிலையங்களில் இருந்தும், ரயில்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
central china floods : சீனாவின் மத்திய மாகாணமான ஹெனான் பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக பெரிய நதிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. செங்ஸாவ் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள பள்ளிகள், ஷாப்பிங் மால்கள், சப்வே ட்ரெய்ன்கள் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் உறைந்துள்ளனர் உள்ளூர் மக்கள்.
Advertisment
அங்கிருந்து வெளியாகும் வீடியோக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Passengers were trapped on a metro line in Zhengzhou, China after downpours hit the city. Rescue efforts have been underway. #GLOBALinkpic.twitter.com/im4nvAfhv0
மழை நீர் காரணமாக 160 ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சப்வே ரயில் ஒன்றில் இடுப்பளவு வெள்ள நீரில் மாட்டிக் கொண்டு நிற்கும் பயணிகளின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 12 பேர் மரணம் அடைந்த நிலையில் மீதம் உள்ள அனைவரும் பத்திரமாக ரயில் நிலையங்களில் இருந்தும், ரயில்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை இந்த மூன்று நாட்களில் பெய்துள்ளது என்று உள்ளூர் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஜென்சவ் பகுதியில் கட்டப்பட்டுள்ள யிஹெத்தான் அணை எப்போது வேண்டுமானாலும் உடைந்து வெள்ள நீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை அழிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil