Advertisment

காட்டுக்கு ராஜான்னா சும்மாவா? கழுகுகள், சிறுத்தையிடமிருந்து இரையை தட்டிச்சென்ற சிங்கம்

சிறுத்தை ஒன்று தான் வேட்டையாடிய இரையை சாப்பிட முயற்சிக்கையில், சுற்றிவளைத்து கழுகுகள் கைப்பற்றிவிட,  திடீரென வந்த சிங்கம் கழுகுகளை விரட்டிவிட்டு இரையை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cheetah haunted vultures snatched food, lion captured prey from vultures, viral video, wild animal video, சிறுத்தை, கழுகுகள், சிங்கம், கழுகுகளிடம் இருந்து இரையை தட்டிச்சென்ற சிங்கம், வைரல் வீடியோ, serial video news, tamil video news, latest tamil video news, tamil nadu news, trending video news, tamil trending video

கொரோனா அச்சுறுத்தலால், அமலில் உள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் மொபைல் போன்களில் சமூக ஊடகங்களில் வீடியோக்களைப் பார்த்து வருகின்றனர். இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக ஊடகங்களில் வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன.

பொதுவாக வனவிலங்குகள் வீடியோ சமூக ஊடகங்களில் எப்போதும் பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பு இருக்கும். அதிலும் காட்டுக்கு அரசன் என்று அழைக்கப்படும் சிங்கம் பற்றிய வீடியோ போட்டாலே வைரலாகி விடும். அந்த வரிசையில், சிறுத்தை ஒன்று தான் வேட்டையாடிய இரையை சாப்பிட முயற்சிக்கையில், சுற்றிலும் பல கழுகுகள் தங்களுக்கும் கிடைக்காதா என்று நெருங்கும்போது, சிறுத்தை ஓடிவிட, திடீரென வந்த சிங்கம் கழுகுகளை விரட்டி அடித்துவிட்டு இரையை தூக்கிக்கொண்டு செல்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஐ.ஆர்.எஸ். அதிகாரி நவீத் த்ரும்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிந்து, குறிப்பிடுகையில், சிறுத்தைதான் வேட்டையாடியது. இங்கே அதனுடைய வேகம் ஒரு பொருட்டல்ல. இந்த சிறுத்தை கழுகுகளால் வெற்றிகொள்ளப்படுகிறது. இங்கு கூட்டத்தின் அளவும் அளவும் ஒரு பொருட்டல்ல, ஒற்றை சிங்கம் உங்கள் கவனத்தை ஈர்க்கிறது பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவைப் பார்ப்பவர்கள், ’காட்டுக்கு ராஜா என்றால் சும்மாவா?’ ’இதைத்தான் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று சொல்லியிருப்பார்களோ என்று நெட்டிசன்கள் வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment